Accessibility Tools

Information Icon

பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை உங்கள் வீட்டிலிருந்தே இணையவழிச் சேவையின் ஊடாக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

📌 பெற்றுக்கொள்ளக்கூடிய பிரதிகள்
  • பிறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள்.
  • திருமணச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள்.
  • இறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள்.
📦 ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள்
  • கோரப்பட்ட சான்றிதழ் eBMD அமைப்பில் (eBMD System) இருப்பின், அதனைத் நாடு முழுவதுமுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவிலும் ஒருநாள் சேவை (One Day Service) மூலம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இணையவழியாக (Online) விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
  • கோரப்பட்ட சான்றிதழ் eBMD அமைப்பில் இல்லாதிருப்பின், அது ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்ட பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவிலேயே பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் அல்லது அந்த குறிப்பிட்ட பிரதேச செயலகத்திற்கே இணையவழியாக (Online) விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகள் தமது பிறப்பு, மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை தாம் வசிக்கும் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள முடியும்.
📋 விண்ணப்பிக்கும் முறை
  • எமது இணையதளத்தைப் பார்வையிடவும்: https://online.ebmd.rgd.gov.lk
  • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும் – நீங்கள் கோருகின்ற பிறப்பு, திருமணம் அல்லது இறப்புச் சான்றிதழ் தொடர்பான துல்லியமான விபரங்களை உள்ளிடவும்.
  • கட்டணத்தைச் செலுத்தவும் - இதற்கான கட்டண இணைப்பு (Payment Link) 2 நாட்களுக்குள் உங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதற்குப் பாதுகாப்பான இணையவழிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் சான்றிதழ் பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள் - நீங்கள் அதனை விரைவுத் தபாலில் (Express Mail) உங்கள் முகவரிக்கு பெற்றுக்கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.
  • இந்த முழுமையான செயல்முறைக்கு 5 வேலை நாட்கள் (Working days) எடுக்கப்படும்.

உதவிகளுக்கு:

மேலதிக தகவல்களுக்கு, தொடர்புடைய மாவட்ட செயலகத்தின் பதிவாளர் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு விபரப் பட்டியல் (PDF)

💳 பணம் செலுத்தும் முறைகள்
  • வங்கி அட்டைகள் (Visa / MasterCard)

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், தங்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை தாங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

📋 விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இப்போது தமது பிறப்பு, திருமணம் அல்லது இறப்புச் சான்றிதழ்கள் உள்ளனவா என்பதை இணையம் வாயிலாக சரிபார்க்கலாம். eBMD போர்டல் மூலம் உரிய இலங்கைத் தூதரகத்திற்கு உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். உங்கள் சான்றிதழ் கிடைக்கப்பெறுவது குறித்த விபரங்கள் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அறிவிக்கப்படும்.


  • எமது இணையதளத்தைப் பார்வையிடவும்: https://online.ebmd.rgd.gov.lk
  • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும் – நீங்கள் கோரும் சான்றிதழ் தொடர்பான துல்லியமான விபரங்களை உள்ளிடவும்.
  • கோரப்பட்ட சான்றிதழ் eBMD அமைப்பில் காணப்பட்டால், உங்கள் தூதரகத்திற்குச் செல்வதற்கான மேலதிக அறிவுறுத்தல்களுடன் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
  • கொடுப்பனவுகளை தூதரகம் அல்லது மிஷன் அலுவலகத்தில் மட்டுமே செலுத்த முடியும்; வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு இணைய வழி (Online) கொடுப்பனவு வசதி இல்லை.
  • சான்றிதழ்கள் பௌதீக ஆவணங்களாக மட்டுமே வழங்கப்படும். எக்காரணம் கொண்டும் மின்னஞ்சல் அல்லது டிஜிட்டல் முறையில் அனுப்பப்படமாட்டாது.

மேலதிக உதவிகளுக்கு:

📞 தொழில்நுட்ப உதவி

தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பிரிவு – பதிவாளர் நாயகம் திணைக்களம்
எங்களைத் தொடர்பு கொள்ளவும்: 011 2889518
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.